தனிமையை அல்ல, தனித்தன்மையை அணுகும் வழி"
ஆழத்தின் மறுபக்கம
நம்ம பார்த்துக்கிட்டா, நிஜமான தனித்தன்மை (individualism) என்னனா - ஒருவருடைய சொந்த விருப்பங்களை, சிந்தனைகளை அறிந்து, கூட்டத்துடன் கலந்து போகாமல், தனக்கு பிடித்த மகிழ்வுற பாதையைத் தேடி செல்லறது.
ஆனா, இப்போதைக் கால புது கவிதைகள்/கருத்துகள் சொல்லும் தனித்தன்மை அதை விட வேறு மாதிரி.
அவை அடிக்கடி 'நான் மட்டும் தான் இந்த மாதிரியானவன்', 'எனக்கு மட்டும் தான் இந்த வேதனை', 'யாராலும் புரிய முடியாத உணர்வு இது'ன்னு சொல்லி, ஒரு வகை தனிமையை சிறப்பாக்குகிறது. அது ஒரு பயங்கரமான தனிமை - என்னை யாரும் புரிந்துக்க முடியாது, நான் மட்டும் தான் இந்த உலகத்தில் உண்மை வாழ்வை எதிர்கொள்கிறேன்’ன்னு ஒரு விதமான விஷமத்துடன் வரும்.
இது வெறும் தனித்தன்மை இல்ல; இது ஏற்கனவே அறுப்பட்ட வாழ்க்கை - existentialism - சிந்தனைக்குள்ளேயே நம்மை இழுத்துச் செல்கிறது. வாழ்வின் அர்த்தம் குறைஞ்சிருக்கு, சந்தோசம் ஒரு பொய், ஏமாற்றம் மட்டும் தான் உண்மைன்னு காட்டும் போல்.
சில modern poetry-கள் மனதில இருக்குற இருண்ட கோணங்களை வெளிப்படுத்திக்காட்டுறதுனால, நிச்சயமாக அவை முக்கியம். ஆனா, அவை நம்மை ஒரே கோணத்திலேயே சிக்க வைத்துவிடக்கூடாது.
தனித்தன்மை அப்படின்னா தனிமையில் வாழ்ந்தால் தான் கிடைக்கும் அப்படின்னு இல்ல. அது, தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் திறமை.
குழுவின் குரலில் கரைந்துபோகவில்லைன்னு மட்டும் தான். ஆனா இப்போ, சில கவிதைகள் தனிமையை ரொம்ப romanticize பண்ணுது – ஒருவரும் புரியமாட்டாங்க, நானும் யாரையும் புரிந்துக்க மாட்டேன்’ன்னு. இது ஒரு இடத்தில் இருந்து பாராட்டக்கூடியது போல தெரியும், ஆனா அது வாழ்க்கையின் நிஜமான பலத்தையும் தடுக்கக்கூடியது.
இந்த தன்மை ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் திகழ்ந்த individualism- இன் நீட்சியாக இங்கே வந்தது. Individualism தன்முனைப்பை, தன்அகந்தையை உருவெடுக்கும், நாம் யாரையும் கேட்கவேண்டாம், நாமே மேலானவன்னு தோன்றி கண்ணில் படுவதை எல்லாம் புறக்கணிக்கவும் , கிண்டல் செய்யவும் தோணும்.
இதுக்கு தீனி போடவே , சமூக வலைதளத்தில் individualism romanticize செய்து கீழ் வருமாறு வெவ்வேறு வகையில் முன் வைக்கப்படுகிறது.
" I care too much, that's why I always end up hurt"
-- Makes pain seem noble
"It's always me who gives and they only take"
-- play the victim while overlooking relationship dynamics
"I don't need anyone. I was born alone and I'll die alone"
-- pushes a detached mindset and glorifes loneliness
"No one ever will understand you, stop expecting"
-- sounds empowering, but encourage emotional withdrawal.
மேலே உள்ள அர்த்தங்களை, கவிதையாக மாற்றும்போது , வலி என்று உணரப்பட்டு சுகமான மருந்தாக மீண்டும் மீண்டும் அதை நோக்கி தள்ளுகிறது.
"நீதான் தவறு" என கைகாட்டி விட்டால், உயர்ந்த மனுசனா மாறிடுவோமா என்ன? பொறுப்பு துறப்பு பெருமைக்குரிய விஷயமும் இல்ல.
அந்தரங்கம் புனிதமானது தான், அது மூடி காத்துக்கொள்ள வேண்டிய பருப்பொருள் தான், ஆனா நம்மளோட அந்தரங்கதை அடுத்தவர்கள் உணரவும் வாய்ப்பளிக்க வேண்டும். அது நமது தளத்தில், நமக்கு அணுகமானவர்களாக இருந்தால் கூட போதும்.
தனக்கு பிடித்த தளத்தில் - ஆர்வமுடன், நேர்மறையாக (positively) அறிந்து கொள்வதில், மாபெரும் அறிவார்ந்த தளத்தில் ஒரு துளியாக பங்கேற்று கொள்வதில் அல்லவா உங்களது தனித்தன்மை இருக்கிறது.
நம் முன் வாழ்ந்த பல அறிவார்ந்த முன்னோடிகள் அறிவுரையும், நாம் கற்று கொண்ட அறிதல்களையும் வைத்து தனக்கென ஒரு புரிதல் கொள்வதில் இருப்பதே முதிர்ச்சி.
தனக்கு வசதியான எதிர்மறை கருத்துக்களை மண்டையில் ஏற்றி கொண்டு, கழிவிரகத்துள் பயணிப்பதே இகழ்ச்சி.
ஜெயகாந்தன் கூறும் individualism, நான் தன்னதனியவன் என்னும் செருக்கு அல்ல, எனது தனித்தன்மையை காப்பாற்றி முன்னிறுத்துவேன் என்றே அர்த்தம்.
Self-centredness போல் ஒரு மடமை இருக்கமுடியுமா? Self centredness கோபத்திற்கு நிகரானது என்று ஓஷோ மேற்கோள் காட்டுகிறார்.
இங்கு, self - love என்பதை self - centredness மேல் குழம்பி கொள்ள வேண்டாம். Self love என்பது தனது சமநிலை தவறாமல் சுய நம்பிக்கையுடன் செயல்படுவது.
ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகள் நம் நாடு நோக்கி தியானம், யோகம் நாடி வருவது அவர்களது self centredness - ஐ தொலைக்கதானே.. நாம் அவர்களுக்கு முன்னோடி இல்லையா? நாம் வாழும் ஞான மரபின் மேலேயே ஏறி நின்று, அதை இகழ்ச்சி செய்தால், படிக்கும் இலக்கியமும் பேசும் புரட்சியும், பாலைவனத்தில் பறக்கும் சருகாக திசையற்று அடித்து செல்வத்திற்கு சமம் அல்லவா?
இது நான் காரணம், இன்றைய இளைஞர்கள் individualism - ஐ romanticise செய்து சுய தன்னிரகம் கொண்டு, எதிர்மறை வாழ்வையே நோக்கி செல்கிறார்கள்.
உண்மையான இன்பம் , நேர்மறை கற்றல் மற்றும் அர்த்தமற்ற பிடிவாதத்தை விட்டு முன்னோக்கி செல்வது மட்டுமே!
Comments
Post a Comment