N . ஶ்ரீராம் இலக்கிய உலகம்
N. ஶ்ரீராம் - எழுத்தாளர் படைப்புலகம் N. ஶ்ரீராமின் மாயதீதம் குறுநாவல் புது வாசிப்பு அனுபவம் அளித்தது. அதில் வரும் பல தொன்மம் சார்ந்த நிகழ்வுகள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அதை வாசித்த முடித்த பின், N. ஶ்ரீராம் நிலம்/மண் சார்ந்த அழகியல் மற்றும் கிராம மக்களின் மண் சார்ந்த வாழ்க்கை முன்வைபவர் என்னும் எண்ணம் ஆசிரியரின் மீது எழுந்தது. பர்சனாலிட்டி ஆக கூற வேண்டுமென்றால், கிராமம் சார்ந்த மனிதர் என அடையாளப்படுத்த வழிவகுத்தது மாயதீதம். இவை யாவையும் உடைக்கும் நாவல், அத்தி மரச்சாலை,.ஶ்ரீராமின் கிராம வாழ்க்கை அனுபவங்களும், தொலைக்காட்சி ஊடக துறையில் அனுபவங்களும் ஒன்று சேர்ந்து இருவேறு உலகை ஒன்று சேர்கிறது, இந்த நாவல். உதரணமாக, நீங்கள் வட சென்னையில் பழிக்காக ஒரு கொலை நடந்தது என செய்தி படிக்கிறீர்கள். தன்னிச்சையாக, கொலையாளி அதே வடசென்னையை சார்ந்தவன் என நீங்கள் எண்ண விளையும். ஆனால், இந்த நாவலில் வரும் கொலையாளி, கொங்கு பகுதியில் பிறந்து, கிராம சூழலில் வளர்ந்து , குடும்ப சந்தர்பங்களால் சென்னை வந்து, ஒரு கொலையாளியாக மாறுகிறான். அவன் வாழ்க்கை அங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதே...