தரூக் (tharook) நாவல் விமர்சனம்
தரூக் (tharook) நாவல் 320 பக்கங்கள் ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன் நாம் வாழும் இடம், நமக்கு பூர்விகமானதா? மனித இனம் தனக்கான சிறந்த இடத்தை தேடி, அங்கு குடியமர்த்தி, தனது இடம் என நிலைநாடுகிறது. இதுவே வரலாறின் தடம். ஒரு சமூகம், நாகரிகம் எவ்வாறு உருவாகிறது என ஊக்கித்து பார்த்தால், ஒரு மேலை சமூகம், இடம்பெயர்ந்து, தனது கொள்கைகளையும், வாழ்க்கை நடைமுறையும், அரசியலையும், சட்டத்தையும் இரக்கமற்று பூர்வ குடிகளின் மேல் செலுத்துகிறது. நவீன காலக்கடத்தில், ஏற்கனவே தனது நாகரிகத்தில், பொருளாதாரத்தில், நவீன கட்டமைப்பில் உச்சம் தொட்ட நிலங்களுக்கு மனிதம் இடம்பெயருகிறான் - பெரும்பாலான சமயம் , அது வேலைக்காக. தின கூலி முதல் ஆராய்ச்சி வரை. அப்படி அந்த மனிதன் செல்லும் போது, குடிபெயர்ந்த இடத்தை கன்னியமாக அணுகிறானா அல்லது ஒரு பொறுப்பற்ற மனிதனாக, குறை கூறி, அந்த பூர்வகுடிகள் மேலேயே சவாரி செய்கிறோமா? இதுவே நாவலின் பேசுபொருள் --- ஆசிரியரின் பலம், அவர் வெவ்வேறு காலக்கட்டதை மாற்றி மாற்றி கதை கூறி, வாசகரின் சுவாரசியத்தை மீட்டுகிறார். கதை நடக்கும் களம், ஆஸ்திரேலியா. எனக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீது ஆவல...