Posts

பொன்முகலி கவிதை புத்தகம் - தாழம்பூ

Image
  பொன்முகலியின் - தாழம்பூ வாசிப்பு அனுபவம் ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய கவிதைகள்.  பெண்ணொருத்தி நாமறிந்த பிரபஞ்சம் தாண்டி , அங்கு இருக்கும் ஓர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த ஊஞ்சலின் நீளம்  மிக அதிகம். அங்கிருந்து வெவ்வேறு உலகிற்கு அவளால்  பயணம் செய்ய முடிகிறது , , எந்த ஒரு அக சமரசமும் அன்றி. அவளுக்கு கடவுளும், காதலனும், சமுதாயமும் , இவை யாவும் ஒன்றே. ஆனால், இவை அனைத்தும் அளிக்கும் பதற்றங்களை பற்றி ஆதங்கம் இருந்தாலும், தனக்கென  தர்க்கமற்ற தனிவாதமும் , ஆதிக்க வெளிப்பாடும், தன்னை அங்கங்கு சிதறுண்டு, அதை பொறுக்கி, கல்லின் இடுக்கில் இருந்து ஒரு பூ மலர்வதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உண்டு. கூடவே, மரணத்தை வாஞ்சையுடன் கைக்குலுக்கி பயணத்தில் கூடவே வைத்து கொள்ளும் இயல்பு.   இதுவே பொன்முகலி கவிதையின் உலகம். ----  தாழம்பூ தொகுப்பில் முகலி- காதலுடன், உடலுடன், மரணத்துடன், இரவுடன் அதீதமான உணர்சி உரையாடலை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது,  சிறு துயர் கொண்டு பல துண்டுகளாக கவிதையில் உள்ள ' தான் ' உடைக்கிறது, அது மைக்ரோசாபில் காணும் உயிரினம்  போல வடிவமற்ற...

N . ஶ்ரீராம் இலக்கிய உலகம்

Image
  N. ஶ்ரீராம் - எழுத்தாளர் படைப்புலகம் N. ஶ்ரீராமின் மாயதீதம் குறுநாவல் புது வாசிப்பு அனுபவம் அளித்தது. அதில் வரும் பல தொன்மம் சார்ந்த நிகழ்வுகள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அதை வாசித்த முடித்த பின், N. ஶ்ரீராம் நிலம்/மண் சார்ந்த அழகியல் மற்றும் கிராம மக்களின் மண் சார்ந்த வாழ்க்கை முன்வைபவர் என்னும் எண்ணம் ஆசிரியரின் மீது எழுந்தது. பர்சனாலிட்டி ஆக கூற வேண்டுமென்றால், கிராமம் சார்ந்த மனிதர் என அடையாளப்படுத்த வழிவகுத்தது மாயதீதம்.      இவை யாவையும் உடைக்கும் நாவல், அத்தி மரச்சாலை,.ஶ்ரீராமின் கிராம வாழ்க்கை அனுபவங்களும், தொலைக்காட்சி ஊடக துறையில் அனுபவங்களும் ஒன்று சேர்ந்து இருவேறு உலகை ஒன்று சேர்கிறது, இந்த நாவல். உதரணமாக, நீங்கள் வட சென்னையில் பழிக்காக ஒரு கொலை நடந்தது என செய்தி படிக்கிறீர்கள். தன்னிச்சையாக, கொலையாளி அதே வடசென்னையை சார்ந்தவன் என நீங்கள் எண்ண விளையும். ஆனால், இந்த நாவலில் வரும் கொலையாளி, கொங்கு பகுதியில் பிறந்து, கிராம சூழலில் வளர்ந்து , குடும்ப சந்தர்பங்களால் சென்னை வந்து, ஒரு கொலையாளியாக மாறுகிறான். அவன் வாழ்க்கை அங்கிருந்து எங்கு நகர்கிறது என்பதே...

மாயதீதம் விமர்சனம்

Image
 100 பக்க குறுநாவல்.  ஆசிரியர் - N. ஶ்ரீராம்  " கோட்டை மாரியம்மன்  - எனது சொந்த ஊர் சேலம், கோட்டை மாரியம்மன் பிரசித்தி பெற்றது. சேர மன்னர்கள் ஒரு கோட்டையை எழுப்பி, அதில் வைத்து வழிபட்ட அம்மனே கோட்டைமாரியம்மனாக மருவியது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன் கோவிலுக்கு இது தலைமை. இன்னும் கோட்டைமேடு என்னும் பெயரில் சேலத்தில் பகுதி உள்ளது. பால்யத்தில் கோட்டை மாரியம்மன் திருவிழா என்றால் ஊரே அமர்க்களம் மற்றும் பய பக்தி  காற்றினில் பரவும் "       சேலம் கோட்டை மாரியம்மன் ---  நாவலின் தொடக்கத்தில், கோட்டை மாரியம்மன் தனது விஸ்வரூப குதிரையில் காவு வாங்க துரத்துகிறது. அது ஏன் துரத்துகிறது, கதை நாயகனுக்கும் கோட்டை மாரியமனுக்கும் என்ன தொடர்பு என்பதே நாவலின் மையம். ஒரு குடும்பத்தில் வம்சாவளியாக வரும் நோய், சாபம் தீர்க்க என்ன வழி? நம்பிக்கை மட்டுமே.. பல்வேறு அம்மன்கள், பல்வேறு ஊர்களில், பலவாறு நம்பிக்கைகள். இந்த நம்பிக்கையை , கிராம மக்களின் வாயிலாக ஶ்ரீராம் அவர்கள் விறு விறு என கதையை நகர்த்துகிறார். பல மருத்துவர்கள் கைவிட்ட சிறுவனின்   தீரா கண் நோயை குணமாக ...

தரூக் (tharook) நாவல் விமர்சனம்

தரூக் (tharook) நாவல் 320 பக்கங்கள் ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன் நாம் வாழும் இடம், நமக்கு பூர்விகமானதா? மனித இனம் தனக்கான சிறந்த இடத்தை தேடி, அங்கு குடியமர்த்தி, தனது இடம் என நிலைநாடுகிறது. இதுவே வரலாறின் தடம். ஒரு சமூகம், நாகரிகம் எவ்வாறு உருவாகிறது என ஊக்கித்து பார்த்தால், ஒரு மேலை சமூகம், இடம்பெயர்ந்து, தனது  கொள்கைகளையும், வாழ்க்கை நடைமுறையும், அரசியலையும், சட்டத்தையும் இரக்கமற்று பூர்வ குடிகளின் மேல் செலுத்துகிறது.  நவீன காலக்கடத்தில், ஏற்கனவே தனது நாகரிகத்தில், பொருளாதாரத்தில், நவீன கட்டமைப்பில் உச்சம் தொட்ட நிலங்களுக்கு மனிதம் இடம்பெயருகிறான் - பெரும்பாலான சமயம் , அது வேலைக்காக. தின கூலி முதல் ஆராய்ச்சி வரை. அப்படி அந்த மனிதன் செல்லும் போது, குடிபெயர்ந்த இடத்தை கன்னியமாக அணுகிறானா அல்லது ஒரு பொறுப்பற்ற மனிதனாக, குறை கூறி, அந்த பூர்வகுடிகள் மேலேயே சவாரி செய்கிறோமா? இதுவே நாவலின் பேசுபொருள் --- ஆசிரியரின் பலம், அவர் வெவ்வேறு காலக்கட்டதை மாற்றி மாற்றி கதை கூறி, வாசகரின் சுவாரசியத்தை மீட்டுகிறார். கதை நடக்கும் களம், ஆஸ்திரேலியா. எனக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீது ஆவல...

தனிமையை அல்ல, தனித்தன்மையை அணுகும் வழி"

  ஆழத்தின் மறுபக்கம நம்ம பார்த்துக்கிட்டா, நிஜமான தனித்தன்மை (individualism) என்னனா  - ஒருவருடைய சொந்த விருப்பங்களை, சிந்தனைகளை அறிந்து, கூட்டத்துடன் கலந்து போகாமல், தனக்கு பிடித்த மகிழ்வுற பாதையைத் தேடி செல்லறது. ஆனா, இப்போதைக் கால புது கவிதைகள்/கருத்துகள் சொல்லும் தனித்தன்மை அதை விட வேறு மாதிரி. அவை அடிக்கடி 'நான் மட்டும் தான் இந்த மாதிரியானவன்', 'எனக்கு மட்டும் தான் இந்த வேதனை', 'யாராலும் புரிய முடியாத உணர்வு இது'ன்னு சொல்லி, ஒரு வகை தனிமையை சிறப்பாக்குகிறது. அது ஒரு பயங்கரமான தனிமை - என்னை யாரும் புரிந்துக்க முடியாது, நான் மட்டும் தான் இந்த உலகத்தில் உண்மை வாழ்வை எதிர்கொள்கிறேன்’ன்னு ஒரு விதமான விஷமத்துடன் வரும். இது வெறும் தனித்தன்மை இல்ல; இது ஏற்கனவே அறுப்பட்ட வாழ்க்கை  - existentialism - சிந்தனைக்குள்ளேயே நம்மை இழுத்துச் செல்கிறது. வாழ்வின் அர்த்தம் குறைஞ்சிருக்கு, சந்தோசம் ஒரு பொய், ஏமாற்றம் மட்டும் தான் உண்மைன்னு காட்டும் போல். சில modern poetry-கள் மனதில இருக்குற இருண்ட கோணங்களை வெளிப்படுத்திக்காட்டுறதுனால, நிச்சயமாக அவை முக்கியம். ஆனா, அவை நம்மை ஒ...

Toilet seat - book Review

 Toilet seat book Author: latha Pages 200 I picked up The Toilet Seat intrigued by its bold title and promise to challenge social taboos around sex and relationships. And while I appreciate what the author intended to do-starting a conversation around female desire, emotional honesty, and societal hypocrisy - I felt the book relied too much on provocation and not enough on depth. The writing often feels like a rant -more reactive than reflective. Complex issues like sexual repression, infidelity, and relationship dynamics are brushed over with broad strokes, without the nuance or emotional insight they deserve. The characters feel like extensions of the author's opinions rather than real people with layered perspectives. At times, it even felt preachy-like the book had already decided what's right and wrong and just wanted to drag the reader along. For a topic this important, I was hoping for more introspection and balance, not just shock value. I respect the attempt. It takes ...

அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்

 விமர்சனம்  ஆசிரியர் தி.ஜானகிராமன்  பக்கங்கள் 172  ஆசிரியர் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்  " நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையே அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாக இருக்கின்றனர். மனித முகங்கள் வேறுபடுவதைப் போல தான் நல்ல இலக்கிய பயிற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும். தான் உண்மை என்ற தேடிய வழியையும் கண்டறிதையும் சமூகத்திற்கு பெரியார்களுக்கும் கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கு பயப்படாமல் ஒருவர் சொல்லும் போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும்." அவர் கூறுவது போல ,நாவல் முழுக்க தனித்தன்மையையும், தான் வடிவமைத்த கதாபாத்திரங்கள் வழியாக உண்மையைத் தேடுவதன் வழியாகவும் புதுமை முயற்சியை செய்துள்ளார். அப்பு தனது ஏழு வயதில்  குடும்பத்தால், திருச்சியில் உள்ள ஒரு குக் கிராமத்தில் வேதம் கற்பதற்காக தனித்து விடப்படுகிறான். அங்கு. 16 வருடம் வேதம் கற்று, மீண்டும் தனது சொந்த ஊரான மெட்ராஸ் பட்டினத்திற்கு கிளம்ப எத்தனைகையி...