கோசலை நாவல் - தமிழ் பிரபா
விமர்சனம்
பக்கங்கள்: 240
ஆசிரியர்: தமிழ் பிரபா
சில மனிதர்கள் வாழக்கை முழுக்க பிற உறவுகளால் கைவிட பட்டவர்களாகவே வாழ்ந்து முடிக்கிறார்கள், ஆனால் கோசலை அவளை கை விடுவதாயில்லை.
உடல் குறைபாடு கொண்ட கோசலை கழிவிரக்கம், inferiority complex என தன்னை முடக்கி கொண்டாலும், அவள் உறவுகளுக்கு தன்னை முற்றிலும் அளிக்கிறாள். ஆனால், நிராகரிப்பு மட்டுமே மிச்சம். ஒவ்வொருவரும் விலகும் போது, அவரவர் நியாயங்களை கற்பனை செய்து கொண்டு அவரவர் வாழ்க்கையை தொடர்கிறார்கள்.
கோசாலையின் தாய் மறைவிற்கு பின், வீட்டை தன் கையில் எடுத்து, தம்பி, தந்தையை தாய் போல காக்கிறாள். எவர் விலகினாலும், அவள் வாழ்க்கை முழுக்க , செயல் ஊக்கமாக நிறைவை அடைந்து, வாழ்க்கை கடக்கிரவளே, கோசலை.
தனக்கு திருமணம் அமைய வாய்ப்பே இல்லை என்று கோசலை எண்ணி கொண்டிருக்கும் போது, காதலன் அமைகிறான், எனினும் கோசலை காதல் வாழ்க்கையை பரீட்சித்து கொண்டே இருக்கிறாள் கேள்விகள் மூலமாக..
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவள் தன்னை தானே திரும்பத் திரும்ப கேள்விக் கொண்டே இருக்கிறாள். அவ்வாறு தன்னோடு பேசிக்கொள்ளும்போது அவளுக்கு கழி இரக்கம் ஏற்பட்டாலும், ஏனோ மனதில் சிறுநெறிப்பு தோன்றியது போல தன்னை தானே மீண்டும் செயலின் மூலமாக அவள் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி செல்கிறாள்.
அவள் காதலை நிராகரிக்கும் தந்தை, சமுதாயத்திற்கு போராளி, ஆனால் வீட்டில் காதலை எதிர்க்கும் ஜாதி ஆணவம், காம கீழ்மை கொண்ட சாதாரண தந்தை. அவள் தம்பி மனைவியுடன், தனி குடித்தனம் செல்லும் போது, முதல் ஏமாற்றம், பின் வாழ்க்கை எல்லாம் ஏமாற்றம், இழப்பு, அவமானம். கணவன் , மகள் இருவரும் அவர்கள் நியாயத்தை முன்வெய்தே விலகி விடுகிறார்கள்.
அங்கு இருந்து , செயலின் வழியாக அவள் தன்னை மீட்டு எடுப்பதே நாவலின் உச்சம்.
இது பெண்ணியம் பேசும் நாவலா? இல்லை.
இது ஒடுக்குமுறை பேசும் நாவலா? இல்லை.
இது அரசியல் பேசும் நாவலா? இல்லை.
தமிழ் பிரபா, கோசலை வழியாக சிந்தாதிரிப்பேட்டை வாழ்க்கையின் மகிழ்ச்சியும் இன்பதையும் அழகாக நடையில் கையாண்டுள்ளார். சென்னையில் எதார்த்த வாழ்க்கையை அங்கும் இங்கும் சுட்டிக்காட்டிக் கொண்டே நாவலின் கதையை நடத்திக் கொண்டு செல்கிறார். இந்த நாவலில், கோசலைக்கு அடுத்து முக்கியமான கதாபாத்திரம் சிந்தாதிரிப்பேட்டை.
ஆசிரியர் தமிழ் பிரபா இந்த நாவலின் மூலமாக பல்வேறு சமுதாய சிக்கல்களையும் கையாண்டு உள்ளார்.உதாரணமாக, குடும்பத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி , உடல் குறைபாடு உள்ளவர்களை மோசமாக நடத்தும் மனிதமின்மை , சமுதாயமாக கல்வியின் மீது உள்ள aversion என பல...
இந்த நாவலில் வரும் காட்சிகள், சினிமா பாணியிலும் அமைந்துள்ளது என என்னுடைய புரிதல். அதற்குக் காரணம் தமிழ் பிரபா, சினிமாவில் எழுத்தாளராக இருப்பதுதான் காரணமா அல்லது அது என்னுடைய கற்பனையா என பிரித்துக் கூற முடியவில்லை.
- கவின்
Comments
Post a Comment