பொன்முகலி கவிதை புத்தகம் - தாழம்பூ

 பொன்முகலியின் - தாழம்பூ வாசிப்பு அனுபவம்


ஒரே மூச்சில் வாசிக்கக்கூடிய கவிதைகள்.

 பெண்ணொருத்தி நாமறிந்த பிரபஞ்சம் தாண்டி , அங்கு இருக்கும் ஓர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அந்த ஊஞ்சலின் நீளம்  மிக அதிகம். அங்கிருந்து வெவ்வேறு உலகிற்கு அவளால்  பயணம் செய்ய முடிகிறது , , எந்த ஒரு அக சமரசமும் அன்றி.

அவளுக்கு கடவுளும், காதலனும், சமுதாயமும் , இவை யாவும் ஒன்றே. ஆனால், இவை அனைத்தும் அளிக்கும் பதற்றங்களை பற்றி ஆதங்கம் இருந்தாலும், தனக்கென  தர்க்கமற்ற தனிவாதமும் , ஆதிக்க வெளிப்பாடும், தன்னை அங்கங்கு சிதறுண்டு, அதை பொறுக்கி, கல்லின் இடுக்கில் இருந்து ஒரு பூ மலர்வதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் உண்டு. கூடவே, மரணத்தை வாஞ்சையுடன் கைக்குலுக்கி பயணத்தில் கூடவே வைத்து கொள்ளும் இயல்பு.

 இதுவே பொன்முகலி கவிதையின் உலகம்.

---- 

தாழம்பூ தொகுப்பில் முகலி- காதலுடன், உடலுடன், மரணத்துடன், இரவுடன் அதீதமான உணர்சி உரையாடலை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது,  சிறு துயர் கொண்டு பல துண்டுகளாக கவிதையில் உள்ள ' தான் ' உடைக்கிறது, அது மைக்ரோசாபில் காணும் உயிரினம்  போல வடிவமற்ற பொருளாக தோன்றினாலும், அது தனது இருப்பை மென்மையாக வெளிப்படுத்தாமல், குறைபாடுகள் கொண்ட தனிமனித இருப்பை கம்பீரத்தின்   பிரக்ஞையுடன் கைகோர்து கொண்டு இருக்கும் கவிதைகளே அதிகம்.


கவிதை 1:

 



   காதலர்கள் மத்தியில் , " நீ எனக்காக என்ன வேணும்னாலும் செய்வியா  ? ' என்னும் கேள்விக்கு பின் விரும்பப்படும் பதில் என்னவாக இருக்க முடியும்.  எவரும் தனக்கு காட்டாத அதீத அன்பையோ, தான் என்னும் சுயத்தை இழக்கும் தன்மையை  காதலர் பிடித்து தடுப்பார் என்னும் எதிர்பார்பே இருக்க முடியும். ஆனால், நான் கீழே விழபோகும் ஆழங்களை பற்றி சற்று நீங்கள் குறைவாக மதிப்பிட்டு விடப்போகிறீர்கள் என எச்சரிக்கையுடன் , அதன் வீரியத்தை  அதீத தன்மையுடன் படிமங்களை கொண்டு உரையாடும் பொன்முகலியின் இந்த கவிதை.

கவிதை 2



இது முதல் முறை படிக்க, இருண்மை மற்றும் எக்சிடென்சியலிசம் என தோன்ற, திரும்ப வாசிக்க வேறு திறப்புகள் தரும் கவிதை. இங்கு  ' போலிகள்' தான் யாவும் என நிறுவ முயற்சிப்பது கவிதைக்கு புதிதல்ல ஆனால் இங்கு அதை  நின்று கூறும் தளத்தின் இடம் , நாம் அன்றாடம் புழங்கும் இடமல்ல.  மனிதர்கள் புழங்காத மலை உச்சியின் மேல் நின்று, நதிகள் சலனமின்றி சமத்தளம் அடைவது போல இந்த போலி சமாதானங்கள் மெதுவாக வந்து அடையும்போது எந்த சலனமும் இல்லை மனதினில். மேலிருந்து போலிகளை சிருஷ்டிக்கவே முடியும்.

கவிதை 3




ஒரு குழப்பம் எப்போது சுவையாக மாறுகிறது? அழுகிய பழத்தில் உழன்று முழுகிப்போகும் புழுவின் ஆனந்தம் போல், அந்த குழப்பத்தினுள் குதித்து,  தன்னை மறக்கடித்து சுகம் கொள்ளும் தருணம். அந்த சுகத்தை அடையப்போகும் வழி ஒவ்வொரு குழப்பங்களுக்கும் வெவ்வேறு. அவைகளுக்கு  உயிர் கொடுக்கும் போது, அது ஒரு மாத்திரையை பரிசளிக்கும் அதன் வீரியத்தை  பரிசோதிக்க. 

இக்கவிதையில் வரும் வண்ணம், நாம் மனதளவில் தோற்றுவிக்கும்  கற்பனைவாதங்களுடன் சேர்கும் பதட்டமே (anxiety) என தோன்றுகிறது.

கவிதை 4




 
இந்த கவிதை, என்னை நம்பு என்னும் கோரிக்கையை கேட்பதற்கு முன், ' பாம்பு விழுங்குவதை போல என்னை விழுங்கு ' என சரணாகதியடைந்த பின், தேவியின் ஒளித்து வைத்திருந்த  கிரீடத்தை நோக்கி ஓட சொல்கிறது.

 இரண்டாம் பத்தியில், இந்த உலகத்தில் உள்ள எந்த மாபெரும் கலைகளுக்குள் அடக்கமுடியாத பெரும் உயிரான தேவி உனக்கு ஈடாகுமா இந்த உலகமும், கிரிடமும் என முடிகிறது. 

 இந்த கவிதை , கத்தியை வைத்து சரி பாதியாக வெட்டிய ஆப்பிள் பழம் போல, இரு பத்தியும் ஒரே சுவை, உணர்ச்சி கொண்ட பொருள் தருகிறது. முகலியின் நெடுங்கவிதைகள், நெடுஞ்சாலை போல் நீளாமல்,  கச்சிதமாக பாகங்களாக பிரிந்து புதிய வாசிப்பனுபவம்  தருகிறது., இந்த கவிதையை வாசிக்கும்போது , இது ' நல்ல கவிதை' என கூறுவதை தவிர்க்கமுடியாது.


கவிதை 5





தன்னிலை உடைந்து சிதறிய அவளை , நீங்கள் எளிதாக அடைந்துவிடுவீர்கள். அவளின் சிதறுண்டிய தன்மையே உங்களுக்கு அவளை அடைய வழியாக இருக்கிறது. 

நீங்கள் அவளின் சிதறிய பாகங்களை சேர்க்க முற்படும்போது, கனமான, மௌனமான அதன் பாகங்களில் வெளிபட்டுகொண்டிருக்கும் அவமானங்களையும், நிராகரிப்களையும் ' நான் ஏற்றுக்கொண்டேன் ' என நீங்கள் சத்தியம் செய்யும்வரை அவள் உங்களை உள்ளே அனுமதிக்கமாட்டாள்.  சிதறுண்டிய பாகங்களின் அறைகூவல்களே உங்களுக்கு எச்சரிக்கையாய் அமையும்.

முகலியின் கவிதைகளில், இந்த எச்சரிக்கைகள் ஏராளமாக பார்க்கலாம், இது யாவும் பரிதாப நோக்குடன் அனுபவிக்கும் கழிவிரக்கமோ கெஞ்சலோ அல்ல,  என்னை நெருங்கும் முன் ரயிலை போல் ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கிறேன் என்பதே, அதற்கு மேலும்,  உங்கள் தலையை தண்டவாளத்தில் வைப்பது என முடிவெடுத்தால் , அந்த எச்சரிகைத்தன்மை அணைத்துக் கொள்ளும்.


கவிதை 6





இந்த கவிதையே பொன்முகலி கவிதை உலகின் உயிர்- நதி. அதீதமே வெளிப்பாடாக பல கவிதைகள் இருந்தாலும், அதனுள் மிகைப்படுதலுக்கோ, ஏதோ ஒரு நினைவின் நினைவூட்டலோ இல்லை. அங்கு வெளிபடும் யாவும், நீங்கள் எதிர்ப்பார்த்து வரக்கூடியது அல்ல. மேலும் நீங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைத்து,  தர்க்கம் செய்ய முற்பட்டால் அங்கு கோட்பாடுகள் இல்லை. காலத்தோடு பொறுத்தி கொள்ள குறிப்புகள் யாவுமில்லை.

அங்கு மிஞ்சுவது , உடைந்து சிதறி கிடக்கும் மனதும், அது மலர் என துளிர்க்குமென நம்பும் கவிதைகள் முகலியுடியது.நீ மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.


---- 

இதுவரை மேலே போட்ட கவிதைகள், தாழம்பூ தொகுப்பிலிருந்து என்னை மிகவும் ஈர்த்த கவிதைகள். அவரது மரணம் சார்ந்த கவிதைகளும் குறிப்பிடத்தக்கவை, இங்கு போட இயலவில்லை.

தீபு ஹரி (பொன்முகலி)

                          தீபு ஹரி (பொன்முகலி)


 முகலியின் கவிதைகள் தற்போது எழுதப்படும்  கவிகளின் பேசுபொருளுக்கு அப்பாற்பட்டது.  இக்கவிதைகளை ரசிக்க  கொஞ்சம் தூக்கலான கிறுக்குத்தனத்தை எழும்பி விடவேண்டும் . தூரத்தில் இருந்து வீசும் குளிர்காற்றை நோக்கிய பயணத்தில் , இன்றைய அனலில் இரவின் தூக்கத்தை தொலைக்கும் துணிச்சல் தேவைப்படுகிறது.



--- 
கவின்,
8012191448



  

Comments

Popular posts from this blog

N . ஶ்ரீராம் இலக்கிய உலகம்

கோசலை நாவல் - தமிழ் பிரபா