அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
விமர்சனம்
ஆசிரியர் தி.ஜானகிராமன்
பக்கங்கள் 172
ஆசிரியர் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்
"நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையே அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும் போது மனிதக் குரல்களையும் முகங்களையும் போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாக இருக்கின்றனர். மனித முகங்கள் வேறுபடுவதைப் போல தான் நல்ல இலக்கிய பயிற்சிகள் வேறுபடுகின்றன. வேறுபட வேண்டும். தான் உண்மை என்ற தேடிய வழியையும் கண்டறிதையும் சமூகத்திற்கு பெரியார்களுக்கும் கெட்ட பெயருக்கோ, புறக்கணிப்புக்கு பயப்படாமல் ஒருவர் சொல்லும் போது அதில் தனித்துவமும் அதனால் ஏற்படும் கவர்ச்சியும் அழகும் நிறைந்து கிடக்கும்."
அவர் கூறுவது போல ,நாவல் முழுக்க தனித்தன்மையையும், தான் வடிவமைத்த கதாபாத்திரங்கள் வழியாக உண்மையைத் தேடுவதன் வழியாகவும் புதுமை முயற்சியை செய்துள்ளார்.
அப்பு தனது ஏழு வயதில் குடும்பத்தால், திருச்சியில் உள்ள ஒரு குக் கிராமத்தில் வேதம் கற்பதற்காக தனித்து விடப்படுகிறான். அங்கு. 16 வருடம் வேதம் கற்று, மீண்டும் தனது சொந்த ஊரான மெட்ராஸ் பட்டினத்திற்கு கிளம்ப எத்தனைகையில் இக்கதை தொடங்குகிறது.
அப்பு வேத சாலையில் இருக்கும் போது கூட தனது குடும்பத்தையே எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறான், திரும்பிச் செல்லும்போது அவர்கள் தன்னை ஏற்பார்களா மாட்டார்களா என்னும் சந்தேகம் இருந்து கொண்டே உள்ளது.
வேத பாட சாலையில் சந்திக்கும் இந்து, இவனை விரும்பி இவனை கட்டியணைக்க முற்படும்போது "அசிங்கமாக இருக்கிறது, நான் உன்னை அம்மா போல அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என நிராகரித்துவிட்டு ஊருக்கு கிளம்பி விடுகிறான்.
அங்கிருந்து வீட்டுக்கு சென்று அங்கு தனது அம்மாவை என்னவாக பார்க்கிறான், அவனது குடும்ப உறுப்பினர்கள் என்னவாக பார்க்கிறார்கள் என்பதை இந்த நாவல். ஒரு வாசகனால் அப்புவின் தந்தையை புரிந்து கொள்வதும் மிக சிக்கல் உள்ளது, அவர் தனது மனைவியை (அப்புவின் அம்மா) குழந்தையாகவே நினைக்கிறார், அதேசமயம் அப்பு தனது அம்மாவை ஒரு கம்பீரமான பெண்ணாகவும் மற்ற பெண்களிலிருந்து மாறுபட்ட பெண்ணாகவும் முடிவுக்கு வருகிறான். அப்புவின் தந்தை, அவனுக்கு கல்யாணத்தைப் பற்றி அறிவுரை கூறும்போது இவ்வாறு கூறுகிறார் "பெண்களுக்கு கம்பீரமான ஆணும் புத்திசாலித்தனமான ஆணும் வேணும் "என பல உதாரணங்களை காட்டி, "பெண்களுக்கு எல்லாமே வேண்டும் ஒன்று இருந்தால் இன்னொன்று வேண்டும் அது இல்லாவிட்டால் ,அதுவும் வேணும்" என கூறி முடிக்கிறார். அவரின் இந்த புரிதல், அப்புவின் அம்மா மீது அவர் கூறும் மறைமுகமான சாடல் அல்லது அப்புவுக்கு அவனுக்கு அம்மாவைப் பற்றி உண்மையை வெளி கொண்டு வர முயற்சி செய்கிறார்.
அப்புவின் அம்மாவிற்கு மொத்தம் ஆறு குழந்தைகள், இருந்தும் தனது அம்மாவின் வாழ்க்கை முறையை பற்றி எண்ணும்போது அவன் செய்வது அறியாது தவிக்கிறான், தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பேச முயல்கிறான் , இருந்தும் மன போரட்டத்தினால் தனது பாடசாலைக்கு திரும்பச் சென்று அதை நிர்வாகிக்க சூழ்நிலைகள் அமைந்து விடுகிறது. பின் பாடசாலைக்கு அவன் அம்மா வருகிறாள் அதற்கு அடுத்து அப்புவே செல்ல பிள்ளை. அவள் அப்பு வேதம் கற்றது எண்ணி எண்ணி பூரிப்பு ,பெருமை கொள்ளாத தருணமே இல்லை. அவள் ஏன் அப்புவை வேதம் கற்க அனுப்பினால்? ஏன் அது மேல் அவ்வளவு தீவிரமாக இருந்தால் என்பது நாவலின் கடைசியில் வரும் தருணம். இருவருக்கும் நடுவில் ஏற்படும் conversations இந்த நாவலின் உச்சம். அப்பு திரும்ப இந்துவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்யும்போது, அவன் மனம் அலைபாய்கிறது , வீட்டுக்கு சென்று வந்த பின் அதுவே சரியாக தோன்றுகிறது. இதை ஆசிரியர் மிக நுட்பமாக எழுதியுள்ளார்.
இந்த நாவலில் வரும் ஒவ்வொரு பெண்களுமே ஏதோ ஒரு இடத்தில் எல்லையை மீறுகிறார்கள். அதேசமயம் அதன் பலனாக தீவிரமான guilt அடைந்து, அப்புவின் மூலமாக ஒரு வழியோ பிராய் சித்தம் கிடைத்து விடாதா என்று அவனிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது உண்மை, எது சரி என்று வாசகர்களே படித்து, அவர்கள் உண்மையை கண்டறிய வேண்டும் என்பதை எனது கோரிக்கை. வேணும் இந்நேரத்தில் எனக்கு leo Tolstoy நாவல் நினைவு கொள்ள வேண்டும் என தோன்றுகிறது, அன்ன கரீனா ஒரு தவறை செய்கிறாள் பின்பு அங்கிருந்து அவளின் மனப்போராட்டங்களையும் அந்த குடும்பம் அந்த தவறினால் எவ்வாறு சீரழிகிறது என நாவலை முடிக்கிறார். 'அம்மா வந்தால்' நாவளிலும் தவறு சரி எது என்பது வாசகனை பொறுத்தது எனினும், அந்த தவறுகளினால் குடும்பத்தில் நடக்கும் பின் விளைவுகளை அவர் சுட்டிக்காட்டிக் கொண்டே உள்ளார்.
- கவின்
ஆசிரியர் தஞ்சாவூர் காரர் என்பதால், நாவல் முழுக்க காவிரி கரையின் அழகை திரும்பத் திரும்ப வருணனை செய்து கொண்டே உள்ளார் . அப்பு சேலத்தில் இருந்து திருச்சிக்கு பயணிக்கிறான், அவன் பயணிக்கும் ஊர்களின் வழியாக அங்கிருந்து சுற்றி தெரியும் இயற்கை அழகுகளை விவரித்து கொண்டே ஆசிரியர் செல்கிறார். என்னுடைய ஊர் சேலம் என்பதினால் அந்த இடம் மிக நெருக்கமாக nostalgia பீலிங்காக இருந்தது.
Comments
Post a Comment