தரூக் (tharook) நாவல் விமர்சனம்

தரூக் (tharook) நாவல்
320 பக்கங்கள்
ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்

நாம் வாழும் இடம், நமக்கு பூர்விகமானதா?
மனித இனம் தனக்கான சிறந்த இடத்தை தேடி, அங்கு குடியமர்த்தி, தனது இடம் என நிலைநாடுகிறது. இதுவே வரலாறின் தடம்.

ஒரு சமூகம், நாகரிகம் எவ்வாறு உருவாகிறது என ஊக்கித்து பார்த்தால், ஒரு மேலை சமூகம், இடம்பெயர்ந்து, தனது  கொள்கைகளையும், வாழ்க்கை நடைமுறையும், அரசியலையும், சட்டத்தையும் இரக்கமற்று பூர்வ குடிகளின் மேல் செலுத்துகிறது. 

நவீன காலக்கடத்தில், ஏற்கனவே தனது நாகரிகத்தில், பொருளாதாரத்தில், நவீன கட்டமைப்பில் உச்சம் தொட்ட நிலங்களுக்கு மனிதம் இடம்பெயருகிறான் - பெரும்பாலான சமயம் , அது வேலைக்காக. தின கூலி முதல் ஆராய்ச்சி வரை. அப்படி அந்த மனிதன் செல்லும் போது, குடிபெயர்ந்த இடத்தை கன்னியமாக அணுகிறானா அல்லது ஒரு பொறுப்பற்ற மனிதனாக, குறை கூறி, அந்த பூர்வகுடிகள் மேலேயே சவாரி செய்கிறோமா?

இதுவே நாவலின் பேசுபொருள்
---

ஆசிரியரின் பலம், அவர் வெவ்வேறு காலக்கட்டதை மாற்றி மாற்றி கதை கூறி, வாசகரின் சுவாரசியத்தை மீட்டுகிறார்.
கதை நடக்கும் களம், ஆஸ்திரேலியா. எனக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் மீது ஆவல் மிகுதி, அந்த அணி பிரிட்டிஷ் மரபு வீரர்களை கொண்டது என உலகம் அறிந்தது. எனினும், சில வருடங்களுக்கு முன், scott boland indigenous australians (aboriginal) இன குழுவில் இருந்து அணியில் சேர்ந்த வீரர். இந்த இன குழுவின் மக்கள் இப்போது ஆஸ்திரியாவில் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு சமவுரிமை கிடைக்க பெறுகிறதா?

கதை நாயகன் காசிம் தனது மனைவியுடன், திருநெல்வேலியில் இருந்து ஐடி (IT) வேலைக்காக இடம்பெயருகிறான். மனைவிக்கு அலாதி மகிழ்ச்சி, அவள் சுதந்திரதை விரும்புபவள், எளிமையானவள், குழப்பமற்றவள். காசிமிகு பெரிதும் ஆஸ்திரேலியா மீது விருப்பம் இல்லை, சென்னையவே விரும்புகிறான். ஆஸ்திரியாவில் தோழி ரெபேக்காவை சந்திக்கிறான், அவள் பூர்வகுடி பெண். அவர்களுக்குள் ஆதிகம் - அடக்குமுறை சார்ந்த  குறித்து விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாய் பறவைகளை , குரைத்து விரட்ட, ரெபகா காசிமிடம், ஏன் புதிதாக வந்த நாய் இந்த பறவைகளை விரட்டுகிறது , இது ' பெட்டை நாய் ' என கூறுகிறாள். பின், காசிமிக்கு என்ன நடக்கிறது? 

1700களில் பிரிட்டிஷ் தனது ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தை உலகெங்கும் பரப்பி, உலகெங்கும் தளபதிகளை அனுப்பி குடியமர்த்தி ஆக்கிரமிப்பு செலுத்துகிறது. அவ்வாறு ஆஸ்திரேலியா நியூ வேல்ஸ் பகுதிக்கு , வில்லியம் தனது தளபதி பிலிப் உடன் கப்பல்களில் இறங்கி , மாட்சிமை பொருந்திய பிரிட்ஷ் நிர்வாகம் செயல்பட ஆரம்பிக்கிறது. அவர்கள் அங்கு பூர்வகுடிகள் நடத்தும் விதம், அவர்களை அடிமைகளாக மாற்றும் முயற்சி என கதை விரிகிறது. பிரிட்டிஷ் மக்கள்  அதிகாரத்தை மட்டும் கொண்டுவராமல், புது நோய்களையும் தொற்றாக கொண்டுவந்து, பூர்வகுடி அழிக்கிறது. நாவலின் இந்த பகுதி, வில்லியமிலின் பார்வையில் விவரிக்கப்படுகிறது. ஆசிரியர், பிரிட்டிஷின் நிர்வாக கட்டமைப்பை மிக விரிவாக எழுதியுள்ளார், வெறும் நிலத்தை அவர்களின் இடமாக மாற்றும் திறன் என பல லேயர்ஸ்.
வில்லியம் தன் நாட்டிற்கு திரும்ப செல்லும் போது, அவள் காதலி நிலை என கிளை கதை.

அன்பின் வழியாக ஒரு கல், நாவல் முழுக்க பகிரப்பட்டு கொண்டே வருகிறது . அன்புக்கு மட்டும் ஆக்கிரமிப்பு இல்லையா?

தரூக் நாவல், பூர்வகுடிகளின் பக்கம் நின்று சமூகத்தை ஆராயும் நாவல்.

------ 

ஆசிரியர் ஒரு இடத்தில், ஆஸ்திரேலியா பூர்வகுடி தனது பாரம்பரிய yidaki என்னும் இசையை வாசித்திருக்க, அதை கதை மாந்தர்கள் கடந்து போகிறார்கள். அந்த இசையின் தேடல் எனக்குள் உருவாகி, யூடியூபில் தேடி ரசித்து கொண்டிருந்தேன்.




Comments

Popular posts from this blog

பொன்முகலி கவிதை புத்தகம் - தாழம்பூ

N . ஶ்ரீராம் இலக்கிய உலகம்

கோசலை நாவல் - தமிழ் பிரபா